Advertisement


பயிற்சியாளராக சேவக் விருப்பமா

மே 28, 2017.
 Comments  
 


Sehwag, Indian Cricket Coach
 

புதுடில்லி: பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி சேவக்கை பி.சி.சி.ஐ., வற்புறுத்தியதாக தெரிகிறது.             

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக கடந்த ஆண்டு முன்னாள் கேப்டன் கும்ளே நியமிக்கப்பட்டார். இவரது  பயிற்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. கும்ளே பதவிக்காலம் வரும் ஜூன் 20 ம் தேதியுடன் முடிகிறது. சம்பள ஒப்பந்தத்தில் வீரர்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இவர் மீது கோபத்தில் உள்ளது.       

சவால் தர முயற்சி: புதிய பயிற்சியாளருக்கான அறிவிப்பை வெளியிட்டது. விண்ணப்பிக்கும் நபர்களின் பட்டியலில், கும்ளே பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு சவால் தரும் முயற்சியில் பி.சி.சி.ஐ., இறங்கியுள்ளது. இந்திய முன்னாள் அதிரடி வீரர் சேவக்கை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. பி.சி.சி.ஐ., மானேஜர் ஒருவர், சேவக்கை தொடர்பு கொண்டுள்ளார். சேவக் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.       

கும்ளேயின் பணியை  நீட்டிக்க செய்ய இந்திய அணியின் சில வீரர்களுக்கு விருப்பம் இல்லை எனத்தெரிகிறது. இதையும், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட பி.சி.சி.ஐ., நிர்வாகக்குழுவிடம் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.       

பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ஐ.பி.எல்., தொடரின்போது, சேவக்கை தொடர்பு கொண்டோம். இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பரிசீலனை செய்யுமாறு கூறினோம். பல முன்னாள் வீரர்களும் பயிற்சியாளர் பதவிக்கு வர விரும்புகின்றனர். அனைத்து விண்ணப்பமும் சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய ஆலோசனைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். இவர்கள்தான், பயிற்சியாளரை முடிவு செய்வர். இதில், வீரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எவ்வித முடிவையும் எடுக்க முடியாது,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?