Advertisement


சாம்பியன்ஸ் டிராபி: சாதிக்குமா இந்தியா

மே 28, 2017.
 Comments  
 


ashwin
 

‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஆறு ‘ஸ்பெஷலிஸ்ட்’ பவுலர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் கோப்பை வென்று சாதிக்கும்,’’ என, முன்னாள் ‘சுழல்’ வீரர் எரப்பள்ளி பிரசன்னா தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர்(50 ஓவர்) வரும் ஜூன் 1 முதல் 18 வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்க உள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் ‘டாப்– 8’ அணிகள் பங்கேற்கின்றன. 

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் ‘சுழல்’ வீரர் எரப்பள்ளி பிரசன்னா, 77, கூறியது: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு அனுபவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அணியில் இடம் பிடித்துள்ள 15 பேரில், 9 பேர் கடந்த 2013 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் விளையாடியுள்ளனர். இது இந்திய அணிக்கு மிகப்பெரும் நன்மையாக அமையும். ஏனெனில், இங்கிலாந்து மண்ணில் நிலவும் சூழ்நிலை, ஆடுகளம் குறித்த அறிவு இவர்களுக்கு அதிகம் இருக்கும். இது போட்டிகளின் இந்திய அணிக்கு கட்டாயம் கைகொடுக்கும். இப்போதுள்ள நிலையில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் சமமான பலத்தில் உள்ளன. அனேகமாக இந்த அணிகள் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. இதில் ஆறு ‘ஸ்பெஷலிஸ்ட்’ பவுலர்கள் இந்திய அணியில் உள்ளது கூடுதல் பலம். 

அந்த ‘இருவர்’:

தவிர, கடந்த 2013 தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல கைகொடுத்த ஜடேஜா (12 விக்., சராசரி 12.13), அஷ்வின் (8 விக்., சராசரி 22.62) என, இருவரும், வரும் தொடரிலும் முக்கிய பங்கு வகிப்பர்.

இந்த இருவருடன் குல்தீப் யாதவ் இணைந்தால் நன்றாக இருந்திருக்கும் என, எதிர்பார்த்தேன். ஆனால், தொடர் இங்கிலாந்து மண்ணில் நடப்பதால், தேர்வாளர்கள் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்க்க வேண்டியதாயிற்று.

‘சுழல்’ முக்கியம்:

இருப்பினும், எப்படியும் 50 ஓவர் போட்டிகள் என்பதால், ‘சுழல்’ வீரர்கள் பங்கு மிகவும் முக்கியமானது. எப்படியும் இவர்கள், 20 ஓவர்கள் வரை பவுலிங் செய்யப் போகின்றனர். போட்டியின் ‘மிடில்’ ஓவர்களில். விக்கெட்டுகளை வீழ்த்துவது இவர்களது பணியாக இருக்கும்.

இவ்வாறு எரப்பள்ளி பிரசன்னா கூறினார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?