Advertisement


தடகளம்: இவிட் முதலிடம்

மே 28, 2017.
 Comments  
 


Ivet Lalove
 

ஜப்பானில் உள்ள கவாசகி நகரில் கோல்டன் கிராண்ட்பிரிக்ஸ் தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ஜப்பானின் சிசாட்டோ, அமெரிக்காவின் சார்னாடோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். மின்னல் வேகத்தில் பறந்த பல்கேரியாவின் இவிட் லாலோவா 11:40 வினாடியில் பந்தய துாரத்தை கடந்து தங்கம் வென்றார். அடுத்தடுத்த இடங்கள் முறையே அமெரிக்காவின் தவான்னா, டியானா பிடித்தனர். 

டென்னிஸ்: செர்பிய வீரர் சாம்பியன்

ஜெர்மனியில் உள்ள ஹெய்ல்போர்ன் நகரில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச், சுலோவேகியாவின் நார்பர்ட்டை சந்தித்தார். அபாரமாக செயல்பட்ட கிராஜினோவிச் 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார். 

ஸ்குவாஷ்: ரிச்சர்ட்ஸ் கலக்கல்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கிராண்ட்பிரிக்ஸ் பைனல்ஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் டாம் ரிச்சர்ட்ஸ், சக வீரரான பென் கோல்மனை எதிர் கொண்டார். துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் ரிச்சர்ட்ஸ் 6–11, 11–6, 12–10, 11–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

கோல்ப்: அமெரிக்க வீரர் அபாரம்

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் சர்வதேச கோல்ப் சாம்பியன்ஷிப் நடந்தது. மொத்தம் 4 சுற்றுகள் கொண்ட இதில் அமெரிக்காவின் சியான், நியூசிலாந்தின் டேனி லீ உள்ளிட்டோர் பங்கேற்றனர், நுணுக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெரிக்காவின் பில்லி ஹார்செல், நியூசிலாந்தின் ஜேசன் ஒரே புள்ளியை (268) பெற்றனர். பின், வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த ‘பிளே–ஆப்’ சுற்றில் அசத்திய ஹார்செல் கோப்பை வென்றார். 

கார்பந்தயம்: செபாஸ்டியன் அசத்தல் 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ‘பார்முலா–இ’ சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் சுவீடனின் பிளிக்ஸ், பிரான்சின் நிகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த ரெனால்ட் அணியின் சுவிட்சர்லாந்து வீரர் செபாஸ்டியன் பியோமி பந்தய துாரத்தை (94.5 கி.மீ.,) 59 நிமிடம் 41:125 நிமிடத்தில் கடந்து கோப்பை வென்றார். இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே அர்ஜென்டினாவின் ஜோஸ் மரியா, ஜெர்மனியின் நிக் ஹெய்ட்பீல்டு பிடித்தனர். 

கூடைப்பந்து: துருக்கிக்கு கோப்பை

துருக்கி, கிரீஸ், ரஷ்யா, ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையில் ‘யூரோ லீக் பைனல்’ கூடைப்பந்து சாம்பியன்ஷிப் நடந்தது. துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பைனலில் துருக்கியின் பெனர்பாக்சி, கிரீசின் ஒலிம்பியாகஸ் அணிகள் மோதின. அபாரமாக செயல்பட்ட பெனர்பாக்சி அணி 80–64 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது. 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?