Advertisement


தோனி, அஷ்வின் தேர்வு சரியா: ஹர்பஜன் ஆவேசம்

மே 26, 2017.
 Comments [3]  
 


Harbhajan Singh
 

புதுடில்லி: ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அஷ்வினுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தியிருக்க வேண்டும். தோனிக்கு சலுகை காட்டுகின்றனர். என்னை தேர்வுக்குழுவினர் புறக்கணித்து விட்டனர்,’’ என, ஹர்பஜன் சிங் புலம்பியுள்ளார்.

இந்திய அணியின் ‘சீனியர்’ சுழல் வீரர் ஹர்பஜன் சிங், 36. டெஸ்ட் அரங்கில் 417 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் மிகவும் கஞ்சத்தனமாக பவுலிங் (எக்கானமி ரேட் 6.48) செய்தார். அதேநேரம், ‘பிளே ஆப்’ சுற்று மற்றும் பைனலில் அனுபவ வீரரான இவருக்குப் பதில் மும்பை அணி கரண் சர்மாவை சேர்த்தது. இதனிடையே, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணித் தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் கூறியது:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவருக்கு ‘பார்ம்’ இருக்கிறதோ, இல்லையோ, மற்றபடி அணிக்கு பல்வேறு வழிகளில் உதவியாக இருப்பார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. கேப்டனாக இருந்ததால், போட்டிகளின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, இளம் வீரர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் பெரிதும் கைகொடுப்பார். இதனால் தோனி என்னை விட சற்று மேலானவர் தான்.

அதேநேரம், இவருக்கு தரப்படும் முன்னுரிமையில் கொஞ்சம் கூட எனக்கு தருவதில்லை. இருவரும் இணைந்து 19 ஆண்டுகளாக விளையாடுகிறோம். இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளோம். 

சலுகை இல்லை:

இரு முறை உலக கோப்பை வென்ற அணியில் நான் இடம் பெற்றுள்ளேன். இவ்வளவு அனுபவம் வாய்ந்த எனக்கு, மற்றவர்களுக்கு கிடைப்பதைப் போல சலுகைகள் கிடைக்கவில்லை. ஏன் இப்படி பாரபட்சம் பார்க்கின்றனர் எனத் தெரியவில்லை.

அஷ்வின் சரியா:

காயத்தில் இருந்து மீண்ட வீரருக்கு உடற்தகுதி இருந்தால் தான் அணியில் சேர்க்கப்படுவர் என்பது விதி முறை. அஷ்வின் விஷயத்தில் இப்படிச் செய்யவில்லை. ஒருவேளை அணி நிர்வாகம் தான் ஓய்வு கொடுத்தது என்பதால், விதிவிலக்கு தந்திருக்கலாம். இருப்பினும், என்னைப் பொறுத்தவரையில் அஷ்வினுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தி இருக்க வேண்டும். இல்லை எனில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அல்லது ஐ.பி.எல்., தொடரில் சாதித்தவர்களை பரிசீலித்து இருக்கலாம். ஏனெனில் கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் கும்ளே குறித்து நன்கு தெரியும். காயமடைந்த வீரர்களை அணியில் விளையாட இவர்கள் அனுமதிக்க மாட்டர். அதேபோல, சாம்பியன் பவுலரான அஷ்வின் தான் போதிய உடற்தகுதியுடன் இல்லை என கூறுவதை விரும்ப மாட்டார். இந்திய அணி சாம்பியன்ஸ் தொடரில் சாதிக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
2   1  
saravanan 4 weeks ago | Report abuse
ரகானே தேர்வு சரியா, சமி தேர்வு சரியா


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
4   2  
saravanan 4 weeks ago | Report abuse
அய்யோ பாவம். அஷ்வின் ஐசிசி யின் சிறந்த வீரர் என்பதை மறந்து விட்டார்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
9   1  
Babu D 4 weeks ago | Report abuse
ஹர்பஜன் சிங் இந்தியாவின் மூத்த, திறமை மிக்க வீரர் தான். இவர் நிகழ்த்திக் காட்டி இருக்கும் சாதனைகள் அநேகம். இது ஒரு புறமிருக்க ஓய்வெடுக்க வேண்டிய வயது எல்லா துறைகளிலும் தவிர்க்க முடியாதது. 36 வயதில் விளையாடும் திறன் இயல்பாகவே குறையத்தான் செய்யும். இந்த முறை தேர்வு செய்யப்படவில்லை என்பதற்காக அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மத்த வீரர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு, தன்னை தானே சிறுமைப் படுத்திக்கொள்ள வேண்டியது இல்லை. கௌவரமாக ஒதுங்கிக்கொண்டு விடுவது மேல்.
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?