Advertisement


இனி வரும் முனிவரும் தடுமாறும்...

மே 19, 2017.
 Comments  
 


india, pakistan
 

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான புதுமையான விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் (50 ஓவர்) இந்தியாவை, பாகிஸ்தான் ஒரு போதும் வென்றது கிடையாது. கடந்த 2015 தொடரில் இந்த இரு அணிகள் மீண்டும் மோதின.இதற்காக ‘ஸ்டார் டிவி’ சார்பில், ‘மோக்கா... மோக்கா’ என்ற விளம்பரம் ஒளிரபரப்பானது. இதில், பட்டாசு வெடிக்கலாம் என பல ஆண்டுகளாக காத்திருந்த பாகிஸ்தான் ரசிகர் மீண்டும் ஏமாற்றம் அடைவார்.  இது பெரியளவில் ‘ஹிட்’ ஆனது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வரும் ஜூன் 4ம் தேதி, மோதவுள்ளன. இதற்காக ‘ஸ்டார்’ நிறுவனம் ‘சப்சே படா மோ’ என்ற பெயரில் மற்றொரு விளம்பரம் வௌியிட்டுள்ளது.

இதில், இளம் தொழிலதிபர் ஒருவர், தனது சொத்துக்கள், கார் அனைத்தையும் தானம் செய்து விட்டு, முனிவராக முடிவு செய்து, மடத்தை அடைவார். இங்கு, தலைக்கு மொட்டை அடிக்க தயாராக இருப்பார். திடீரென வீசும் காற்று காரணமாக, அருகில் இருந்த நாளிதழ் ஒன்று பறக்கத் துவங்கும். அதில், இந்தியா–பாகிஸ்தான் மோதல் குறித்த விளம்பரத்தை பார்ப்பார்.

உடனே மனம் தடுமாறிய அவர், மொட்டை அடிக்க வந்தவரை தள்ளிவிட்டு, மடத்தை விட்டு வெளியே ஓடி, கிரிக்கெட் பார்க்க செல்வது போல, விளம்பரம் முடியும்.

இந்த விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?