Advertisement


வங்கதேச அணி அபார வெற்றி

மே 19, 2017.
 Comments  
 


bangladesh cricket
 

டப்ளின்: முத்தரப்பு ஒரு நாள் தொடரின் லீக் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் என மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் அயர்லாந்தில் நடக்கிறது. டப்ளினில் நடந்த 4வது லீக் போட்டியில் வங்கதேசம், அயர்லாந்து அணிகள் மோதின, ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் மொர்டசா ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

அசத்தல் ‘வேகம்’:

அயர்லாந்து அணிக்கு ஸ்டிரிலிங் (0), கேப்டன் போர்டர்பீல்டு (22) ஏமாற்றினர். முஸ்தபிஜூர் ‘வேகத்தில்’ நெயில் பிரையன் (30), வில்சன் (6) சிக்கினர். ஜாய்சி (46) ஆறுதல் அளித்தார். மற்றவர்கள் ஏமாற்ற, அயர்லாந்து அணி 46.3 ஓவரில் 181 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிஜூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

சவுமியா சர்கார் அபாரம்:

எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், சவுமியா சர்கார் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. தமிம் (47) அரை சத வாய்ப்பை இழந்தார். சபிர் 35 ரன்கள் எடுத்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுமியா சர்கார் அரை சதம் விளாசி வெற்றிக்கு கைகொடுத்தார். முடிவில், வங்கதேச அணி 27.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சவுமியா சர்கார் (87), முஷ்பிகுர் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?