Advertisement


பைனலுக்கு முன்னேறியது மும்பை: நாளை புனே அணியுடன் மோதல்

மே 19, 2017.
 Comments  
 


mumbai team
 
பெங்களூரு: பத்தாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு மும்பை அணி முன்னேறியது. நேற்று நடந்த தகுதிச் சுற்று–2ல், 6 விக்கெட் வித்தியாசத்தில் கோல்கட்டா அணியை வீழ்த்தியது. நாளை நடக்கவுள்ள பைனலில் மும்பை, புனே அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த 10வது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கான தகுதிச் சுற்று–2ல் மும்பை, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

காம்பிர் ஏமாற்றம்:

கோல்கட்டா அணி துவக்கத்திலேயே தடுமாறியது.  ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பும்ரா ‘வேகத்தில்’ கிறிஸ் லின் (4). உத்தப்பா(1) நடையை கட்டினர். கரண் சர்மா ‘சுழலில்’ நரைன் (10), கேப்டன் காம்பிர் (12), கிராண்ட்ஹோம் (0) அவுட்டாகினர்.  கோல்கட்டா அணி, 31 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த இஷாங்க் ஜாகி, சூர்யகுமார் யாதவ் ஜோடி போராடியது. இந்த நேரத்தில் மீண்டும் கனலாக பந்துவீசிய கரண் சர்மா இம்முறை ஜாகியை (28) வெளியேற்றினார். பியுஸ் சாவ்லா (2), கூல்டர்–நைல் (6) சொற்ப ரன்னில் வெளியேறினர். சூர்யகுமார் (31) ஆறுதல் தந்தார். அன்கித் ராஜ்பூத் (4) நிலைக்கவில்லை. கோல்கட்டா அணி 18.5 ஓவரில் 107 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. உமேஷ் யாதவ் (2) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை அணி சார்பில் கரண் சர்மா 4, பும்ரா 3, ஜான்சன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

குர்னால் அபாரம்:

சுலப இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு சிம்மன்ஸ் (3) ஏமாற்றினார். உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ பார்த்திவ் படேல் (14), அவுட்டானார். பியுஸ் சாவ்லா ‘சுழலில்’ அம்பதி ராயுடு (6) போல்டானார். மும்பை அணி, 34 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த கேப்டன் ரோகித் சர்மா, குர்னால் பாண்ட்யா ஜோடி, கோல்கட்டா அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்தது.  நான்காவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த போது ரோகித் (26) ‘பெவிலியன்’ திரும்பினார்.

மும்பை அணி 14.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. குர்னால் (45), போலார்டு (9) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா அணி சார்பில் சாவ்லா 2 விக்கெட் வீழ்த்தினார்.

நான்காவது முறை

ஐ.பி.எல்., தொடரில், மும்பை அணி, 4வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. முன்னதாக விளையாடிய 3 பைனலில், இரண்டு முறை (2013, 2015) கோப்பை வென்றது. ஒருமுறை (2010) 2வது இடம் பிடித்தது. சென்னை அணி, அதிகபட்சமாக 6 முறை (2008, 2010 – 13, 2015) பைனலுக்கு தகுதி பெற்றது.

மகாராஷ்டிரா ஆதிக்கம்

ஐதராபாத்தில் நாளை நடக்கவுள்ள 10வது ஐ.பி.எல்., தொடருக்கான பைனலில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மும்பை, புனே அணிகள் மோதுகின்றன. 

16

ஐ.பி.எல்., அரங்கில் கோல்கட்டாவுக்கு எதிராக மும்பை அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 21 போட்டியில் மும்பை 16, கோல்கட்டா 5 போட்டிகளில் வெற்றி பெற்றன.

* இத்தொடரில் கோல்கட்டாவுக்கு எதிராக மும்பை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக இரண்டு லீக் போட்டியிலும் வென்றது.

* கோல்கட்டாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 6வது (2015ல் 1 + 2016ல் 2 + 2017ல் 3 போட்டி) வெற்றியை பெற்றது மும்பை.

மீண்டும் ‘டாட்டா’

கடந்த முறை  (2016) புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்த கோல்கட்டா அணி, ‘எலிமினேட்டர்’ போட்டியில் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது. இம்முறை 4வது இடம் பிடித்த கோல்கட்டா, ‘எலிமினேட்டரில்’ ஐதராபாத் அணியை வீழ்த்தி பதிலடி தந்தது. நேற்று மும்பைக்கு எதிரான தகுதிச் சுற்று–2ல் தோல்வி அடைந்து மீண்டும் பைனலுக்கு ‘டாட்டா’ காட்டி பரிதாபமாக  வெளியேறியது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?