Advertisement


இந்திய பெண்கள் வெற்றி

மே 19, 2017.
 Comments  
 


india, women cricket team
 

போட்செப்ஸ்ட்ரூம்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, அயர்லாந்து, ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்க பெண்கள் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நேற்று ஜிம்பாப்வேயை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி ‘பேட்டிங்’ செய்தது.

‘சுழல்’ தொல்லை:

ஜிம்பாப்வே அணிக்கு துவக்கம் முதலே இந்திய ‘சுழல்’ தொல்லை தந்தது. லாரன் டக்–அவுட்டானார். தீப்தி சர்மா பந்துவீச்சில் சிபோ (34), மோட்ஸ்டர் (12) சிக்கினர். பூனம் யாதவ் ‘சுழலில்’ முசாங்வே (2), நிக்மோ (27) அவுட்டாகினர். கேப்டன் மேயர்ஸ் டக்–அவுட்டானார். முடிவில், ஜிம்பாப்வே அணி 42.3 ஓவரில் 98 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா, பூனம் யாதவ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். 

வேதா அரை சதம்:

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்ன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. பொறுப்புடன் செயல்பட்ட வேதா அரை சதம் அடித்து வெற்றியை எளிதாக்கினார். முடிவில், இந்திய அணி 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வேதா (50), ஹர்மன்பீரித் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.

நாளை நடக்கவுள்ள பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?