Advertisement


மும்பைக்கு ‘டாட்டா...’ காட்டுமா கோல்கட்டா

மே 18, 2017.
 Comments  
 


IPL Cricket, Qualifier 2, Kolkata, Mumbai
 

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி, பைனலுக்கு செல்லும் என்பதால் விறுவிறு போட்டி காத்திருக்கிறது.             

பத்தாவது ஐ.பி.எல்., தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிச்சுற்றில் வென்ற புனே அணி பைனலுக்கு சென்று விட்டது. நள்ளிரவு வரை நீடித்த ‘எலிமினேட்டர்’ போட்டியில் கோல்கட்டா அணி, ஐதராபாத்தை வென்றது. இதையடுத்து, இன்று பெங்களூருவில் நடக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டியில், ஐ.பி.எல்., தொடரில் இருமுறை கோப்பை வென்ற அணிகளான கோல்கட்டா (2012, 14), மும்பை (2013, 15) மோதுகின்றன.             

‘ஹாட்ரிக்’ வெற்றி: இத்தொடரில் லீக் சுற்றில் மோதிய இரு போட்டிகளிலும் மும்பை அணி, கோல்கட்டாவை சாய்த்தது. இந்த நம்பிக்கையுடன் இன்றும் களம் காண்கிறது. பார்த்திவ் படேல், சிம்மன்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தருகிறது. அடுத்து கேப்டன் ரோகித், போலார்டு,  ‘ஆல் ரவுண்டர்கள்’ ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யா, என, பலரும் ரன் சேர்ப்பது பலம். ‘மிடில்–ஆர்டரில்’ கைகொடுத்த ராணா (13 போட்டி, 333 ரன்), அம்பதி ராயுடுவுக்குப் பதில் மீண்டும் இடம் பெறலாம்.             

வேகக்கூட்டணி: ‘வேகத்தில்’ மலிங்கா, மெக்லீனகன் கைகொடுக்கின்றனர். கடந்த முறை ரன்களை வாரி வழங்கிய (4 ஓவர், 46 ரன்) மெக்லீனகன் சுதாரித்தால் நல்லது. பும்ராவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு கூடுதல் பலம் சேர்க்கிறது. இருப்பினும், புனே அணிக்கு எதிராக கடைசி கட்டத்தில் 41 ரன்களை வாரி வழங்கியது போன்ற, தவறை தவிர்ப்பது அவசியம்.                        

காம்பிர் பலம்: ‘எலிமினேட்டர்’ போட்டியில் கடைசி நேரத்தில், ஐதராபாத்தை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது கோல்கட்டா அணி. அணிக்கு சிறப்பான துவக்கம் தர கிறிஸ் லின், சுனில் நரைனின் ஜோடி காத்திருக்கிறது. மணிஷ் பாண்டே (396 ரன்), உத்தப்பா (387) நிலைத்து விட்டால் எதிரணிக்கு தொல்லைதான். இக்கட்டான நேரத்தில் கைகொடுக்க கேப்டன் காம்பிர் உள்ளார். பின் வரிசை வீரர்களான யூசுப் பதான், சூர்யகுமாரின் பங்களிப்பு நிச்சயம் தேவை.              

மிரட்டும் பவுலிங்: கோல்கட்டா அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. உமேஷ் யாதவ், கூல்டர் நைல், பவுல்ட் என, அனுபவ ‘வேகங்கள்’ மறுபடியும் தொல்லை தரலாம். தவிர, சுனில் நரைன், பியுஸ் சாவ்லா துல்லியமாக ‘சுழல்’ வலை வீசினால், மீண்டும் பைனலுக்கு செல்லலாம்.            

லீக் சுற்றில் அடைந்த தோல்விகளை மறந்து, மும்பை அணிக்கு ‘டாட்டா...’ காட்டி விட்டு, கோல்கட்டா பைனலுக்கு செல்லுமா என, பொறுத்திருந்து பார்க்கலாம்.

மழை வருமா            

போட்டி நடக்கவுள்ள பெங்களூரு நகரின் வெப்பநிலை இன்று அதிகபட்சம் 33, குறைந்தபட்சம் 21 ‘டிகிரி செல்சியசாக’ இருக்கும். மழை வர 50 சதவீதம் வாய்ப்புள்ளது.                         

யாருக்கு சாதகம்             

* ‘பிளே ஆப்’ சுற்றில் இந்த ஆண்டு ‘ரிசர்வ் டே’ கிடையாது,             

* இதனால், மழையால் போட்டி ரத்தானால், லீக் சுற்றில் முன்னிலை பெற்ற அணி வென்றாக அறிவிக்கப்படும்.             

* இதனால், கோல்கட்டாவை (16 புள்ளி) விட முன்னிலையில் உள்ள மும்பை அணி (20), பைனலுக்கு செல்லும்.            

‘நாக்–அவுட்’ வெற்றி

ஐ.பி.எல்., அரங்கில் இரு அணிகளும் இதுவரை ஒரே ஒரு முறை ‘நாக்–அவுட்’ சுற்றில் மோதி உள்ளன. கடந்த 2011ல் நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியில் (மும்பை, வான்கடே) மும்பை அணி, கோல்கட்டாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஹர்பஜனுக்கு வாய்ப்பு            

புனே அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாததால் தான், முதல் தகுதிச்சுற்றில் ’சீனியர்’ ஹர்பஜன் சிங் சேர்க்கப்படவில்லை என கூறப்பட்டது. இன்று கோல்கட்டா அணியில் காம்பிர் உட்பட பல இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், குர்னால் பாண்ட்யா நீக்கப்பட்டு ஹர்பஜன் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.            

வெளியேறியது ஐதராபாத்

பெங்களூருவில் நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியில் முதலில் விளையாடிய ‘நடப்பு சாம்பியன்’ ஐதராபாத் அணி, 20 ஓவரில் 128/7 ரன்கள் எடுத்தது. பின், மழை காரணமாக இலக்கு மாற்றப்பட்டது. ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிப்படி, 6 ஓவரில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என, களமிறங்கிய கோல்கட்டா அணியை, லின் (6), உத்தப்பா (1), யூசுப் பதான் (0) கைவிட்டனர். கேப்டன் காம்பிர் (32*), ஜாகி (5*) இணைந்து கோல்கட்டா அணியை வெற்றி பெறச் செய்தனர். இதனையடுத்து ஐதராபாத் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?