Advertisement


டெஸ்ட் தரவரிசை: இந்தியா முதலிடம்

மே 18, 2017.
 Comments  
 


ICC Test Cricket Team Ranking, India, South Africa
 

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து ‘நம்பர்–1’ இடத்தில் உள்ளது.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஒரு புள்ளி கூடுதலாக பெற்று 123 புள்ளிகளுடன், ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது. தென் ஆப்ரிக்க அணி, 109 புள்ளிகளில் இருந்து 117 புள்ளிகளாக உயர்ந்து, இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி, 108 புள்ளிகளில் இருந்து 100 புள்ளிகளாக குறைந்து, மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

இரண்டு புள்ளிகள் சரிந்த இங்கிலாந்து அணி (99), 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. நான்கு புள்ளிகள் குறைவாக பெற்ற பாகிஸ்தான் அணி (93), 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து நியூசிலாந்து அணி (97) 5வது இடத்துக்கு முன்னேறியது.

புள்ளிகள் கூடுதலாக பெற்ற இலங்கை (93 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (75), வங்கதேச (69) அணிகள் முறையே 7, 8, 9வது இடங்களை தக்கவைத்துக் கொண்டன. ஐந்து புள்ளிகள் குறைந்த ஜிம்பாப்வே (0), 10வது இடம் பிடித்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?