Advertisement


கோல்கட்டா அசத்தல் வெற்றி

மே 17, 2017.
 Comments [2]  
 


IPL Cricket, Kolkata, Hyderabad
 

பெங்களூரு: மழையால் பாதிக்கப்பட்ட ஐ.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில், கோல்கட்டா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி வெளியேறியது.

பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடந்த 10வது ஐ.பி.எல்., தொடருக்கான ‘எலிமினேட்டர்’ போட்டியில் கோல்கட்டா, ‘நடப்பு சாம்பியன்’ ஐதராபாத் அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் மணிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், கிராண்ட்ஹோம், அன்கித் ராஜ்பூத் நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், நாதன் கூல்டர்–நைல், பியுஸ் சாவ்லா, இஷாங்க் ஜாகி சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் தீபக் ஹூடா, ஹென்ரிக்ஸ், முகமது நபி, முகமது சிராஜ் ஆகியோருக்கு பதிலாக யுவராஜ் சிங், வில்லிம்யசன், கிறிஸ் ஜோர்டான், பிபுல் ஷா தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணிக்கு ஷிகர் தவான் (11) ஏமாற்றினார். வில்லியம்சன் (24), கேப்டன் டேவிட் வார்னர் (37), விஜய் சங்கர் (22) ஓரளவு கைகொடுத்தனர். யுவராஜ் சிங் (9), கிறிஸ் ஜோர்டான் (0) ஏமாற்றினர். நமன் ஓஜா (16) நிலைக்கவில்லை.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. பிபுல் சர்மா (2) அவுட்டகாமல் இருந்தார். கோல்கட்டா சார்பில் கூல்டர்–நைல் 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

கலக்கல் காம்பிர்: பின், கனமழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு பின், 6 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில் கோல்கட்டாவின் வெற்றிக்கு 48 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கிறிஸ் லின் (6) ஏமாற்றினார். யூசுப் பதான் ‘டக்–அவுட்’ ஆனார். ஜோர்டான் ‘வேகத்தில்’ ராபின் உத்தப்பா (1) வெளியேறினார். சித்தார்த் கவுல் வீசிய 4வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய கேப்டன் காம்பிர், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

கோல்கட்டா அணி 5.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காம்பிர் (32), இஷாங்க் ஜாகி (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர், ஜோர்டான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின்மூலம், நாளை (மே 19) பெங்களூருவில் நடக்கவுள்ள 2வது தகுதிச் சுற்றில், மும்பை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 21ல் ஐதராபாத்தில் நடக்கவுள்ள பைனலில் புனே அணியுடன் மோதும்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
T N SUBRAMANIYAN 2 days ago | Report abuse
20 ஓவரை 6 ஓவராக குறைக்கும் போது, விக்கெட் 10 என்பதை மூன்றாகவோ அல்லது நான்காகவோ குறைக்க வேண்டும். விக்கெட் இழப்பை பற்றி கவலை படாமல் பேட்டிங் அணி, ஓங்கி ஓங்கி அடித்து ஆறும் நாலுமாக அடிக்கிறார்கள். விக்கெட் இழப்பும் கணக்கில் எடுக்கும் நிலை என்றால் இப்படி மட்டையை தூக்க மாட்டார்கள். குறைகள் உள்ள இந்த திட்டம் மாற்றப்பட வேண்டும்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
4   0  
pauldurai.m 5 days ago | Report abuse
பைனலில் புனே அணி வெற்றி பெறும்.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?