Advertisement


சபாஷ் வாஷிங்டன் சுந்தர்: புதிய‘சுழல் புயலாக’அவதாரம்

மே 17, 2017.
 Comments [1]  
 


Washinton sundar, IPL Cricket, Pune
 

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் ‘சுழல்’ ஜாலம் காட்டுகிறார் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர். ‘பவர்–பிளே’ ஓவர்களில் அசத்தும் இவர், புனே அணியை பைனலுக்கு  அழைத்துச் சென்றுள்ளார்.

பத்தாவது ஐ.பி.எல்.,  தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் மும்பையில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் புனே அணி, மும்பையை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.இப்போட்டியில் புனே அணியின் வெற்றிக்கு ‘பேட்டிங்கில்’ தோனி கைகொடுத்தார். கடைசி கட்டத்தில் சிக்சர்களாக விளாசி பரவசப்படுத்தினார். பவுலிங்கில், வாஷிங்டன் சுந்தர் மிரட்டினார். ‘பவர் பிளே’ ஓவரில் துல்லியமாக பந்துவீசிய இவர் ‘ஆபத்தான’ ரோகித், ராயுடு, போலார்டை வெளியேற்றினார். 4 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி 16 ரன் மட்டுமே வழங்கினார். 

தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், 17, சென்னையில் பிறந்தவர். துவக்கத்தில் பேட்ஸ்மேனாக இருந்த இவர், பின் ‘ஆப்–ஸ்பின்னர்’ அவதாரம் எடுத்தார். கடந்த அக்டோபரில் மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழகம் சார்பில் அறிமுக வாய்ப்பு பெற்றார். இதுவரை 5 முதல் தர  (7 விக்.,), 9 ‘லிஸ்ட் ஏ’ (7) போட்டிகளில் விளையாடி உள்ளார்.                                   

தேடி வந்த வாய்ப்பு: கடந்த ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் 6  போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய இவர், 116 ரன்கள் குவித்தார். இம்முறை புனே அணியில் இடம் பெற்றிருந்த அஷ்வின் காயம் காரணமாக விலக, வாஷிங்டனுக்கு வாய்ப்பு தேடி வந்தது. தனது வெற்றி ரகசியம் குறித்து இவர் கூறியது:

‘டுவென்டி–20’ போட்டிகளில் பேட்ஸ்மேனின் கால் அசைவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இதற்கேற்ப பந்துவீசினால், ரன் குவிக்க திணறுவர். எனது முதல் ஐ.பி.எல்., தொடரிலேயே இதுவரை 10 போட்டிகளில் விளையாடி விட்டேன். ஒரு ‘ஆப்– ஸ்பின்னருக்கு’ இந்த அளவு வாய்ப்பு கிடைப்பது கடினம். எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு நன்றி.                   

பெற்றோர் காரணம்: மும்பைக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் ‘பவர் பிளே’ ஓவரில் பந்துவீசினேன். இதை ஒரு சவாலாகவே எதிர் கொண்டேன். எனது திறமை மீது நம்பிக்கை வைத்து பந்துவீசினேன். இது சாதகமாக அமைந்தது மகிழ்ச்சி. ஆட்ட நாயகன் விருதை எனது பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். இவர்களின் வேண்டுதல்தான் எனது செயல்பாட்டிற்கு கைகொடுத்தது. 

இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார்.                         

ஸ்மித் பாராட்டு: புனே கேப்டன் ஸ்மித் கூறுகையில்,‘‘ சுந்தரின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. இவரது செயல்பாட்டை எண்ணி பெருமை கொள்கிறேன். ஐ.பி.எல்., போன்ற மிகப்பெரிய தொடரில் 17 வயது வீரரான இவர், வியகத்தக்க முறையில் பந்துவீசினார்,’’ என்றார்.

இளம் வீரர்                  

ஐ.பி.எல்., தொடரில் குறைந்த வயதில் (17) ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர் என்ற பெருமை பெற்றார் வாஷிங்டன் சுந்தர். 

3            

ஐ.பி.எல்.,வரலாற்றில் 20 வயதுக்குள் ஒரே போட்டியில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சுந்தர் (17 வயது, 223 நாள்) முதலிடம் பிடித்தார். அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான் அணியின் கம்ரான் கான் ( 18 வயது, 44 நாள், எதிர்– கோல்கட்டா, 2009), டில்லி அணியின் சங்வான் (18 வயது, 169 நாள், எதிர்– சென்னை, 2009) உள்ளனர்.            

பெயர் எப்படி

வாஷிங்டன் தந்தை பெயர் சுந்தர். இவரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான், தமிழக அணிக்கான ரஞ்சி கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தாலும், ‘லெவன்’ அணியில் இடம்கிடைக்கவில்லை. தந்தை சுந்தர் கூறுகையில்,‘‘ வாஷிங்டன் என்பவர் தான் எனக்கு குருவாக இருந்து கிரிக்கெட் ‘பேட்’ வாங்கி தந்து உதவி செய்தார். இவர் இறந்த சில மாதங்களில் மகன் பிறந்தான். வாஷிங்டன் நினைவாக அவரது பெயரை எனது மகனுக்கு சூட்டினேன்,’’ என்றார்.            

என்ன ‘ஸ்பெஷல்’            

வாஷிங்டன் சுந்தரை பொறுத்தவரை பேட்ஸ்மேனின் கால் அசைவுகளை வைத்து பந்துவீசுவார். இறங்கி அடிக்க முயற்சிப்பாரா அல்லது ‘கிரீசில்’நின்று விளையாடுவாரா என துல்லியமாக கணிப்பதுதான் ‘ஸ்பெஷலாக’ உள்ளது. ரன்களை வாரி வழங்குவது இல்லை. இத்தொடரில் ஐதராபாத் கேப்டன் வார்னருக்கு 22 பந்து வீசி 24 ரன்கள் மட்டுமே வழங்கி உள்ளார். இதே போல, ஐதராபாத்தின் ஷிகர் தவான் (14 பந்து), பெங்களூரு கேப்டன் கோஹ்லிக்கு (5 பந்து) எதிராக  முறையே 14 மற்றும் 3 ரன்கள் மட்டுமே விட்டுத்தந்தார். இவரது சிறப்பான பந்துவீச்சு தொடர்ந்தால் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
sivakumar 2 days ago | Report abuse
வாஷிங்டன் சுந்தர் விரைவில் இந்திய அணியில் சேர வாழ்த்துகிறேன்.
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?