Advertisement


கால்பந்து: இந்திய அணி ‘டிரா’

மே 17, 2017.
 Comments  
 


India U17, Saint Leu, World Cup Soccer
 

பாரிஸ்: இளம் இந்திய கால்பந்து அணி, செயின்ட் லியு அணிக்கு எதிரான போட்டியை  ‘டிரா’ செய்தது.             

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில் இந்தியாவில் 17 வயதுக்குட்பட்ட அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை தொடர் (வரும் அக்., 6–28) நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் போர்ச்சுகல் சென்றது. தற்போது பிரான்சில் விளையாடி வருகிறது. பாரிஸ் லீக் தொடரில் பங்கேற்கும் இரண்டாம் தர செயின்ட் லியு கிளப் அணியுடன் நேற்று மோதியது.             

முதல் பாதியில்  இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும், கோல் அடிக்க முடியவில்லை. போட்டியின் 58வது நிமிடத்தில் செயின்ட் லியு கிளப் அணியின் ரேமி ஒரு கோல் அடிக்க இந்திய அணி 0–1 என, பின் தங்கியது. 72வது நிமிடத்தில் இந்திய வீரர் கோமல், நீண்ட துாரத்தில் இருந்து அருமையாக கோல் அடித்தார். முடிவில் 1–1 என்ற கணக்கில் போட்டி ‘டிரா’ ஆனது.

டிக்கெட் காலி      

உலக கோப்பை (17 வயது) தொடரில், கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் பைனல் (அக்., 28) உட்பட 10 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்காக ரூ. 480, ரூ. 960, ரூ. 1920 மதிப்பிலான  டிக்கெட்டுகள் விற்பனை துவங்கியது. 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக ‘பிபா’ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?