Advertisement


இத்தாலி ஓபன்: ஷரபோவா விலகல்

மே 17, 2017.
 Comments  
 


Sharapova, Italy Open Masters Tennis
 

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, காயம் காரணமாக பாதியில் விலகினார்.      

இத்தாலி தலைநகர் ரோமில், இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, குரோஷியாவின் மிர்ஜனா லுாசிக்–பரோனி மோதினர். முதல் செட்டை 4–6 என இழந்த ஷரபோவா, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6–3 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 2–1 என முன்னிலை வகித்திருந்த ஷரபோவா, இடது கால் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனையடுத்து மிர்ஜனா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.      

‘வைல்டு கார்டு’ மறுப்பு: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் (மே 28 – ஜூன் 11) பங்கேற்ற ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ முறையில் சிறப்பு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரான்ஸ் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் பெர்னார்டு, ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தார்.      

சிக்கலில் விம்பிள்டன்: கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியதால், ஷரபோவாவுக்கு 15 மாத கால தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்த பின், ஸ்டட்கர்ட் (ஜெர்மனி, அரையிறுதி), மாட்ரிட் (ஸ்பெயின், 2வது சுற்று), ரோம் (இத்தாலி, 2வது சுற்று) ஓபனில் ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி மூலம் பங்கேற்றார். தற்போது இத்தாலி ஓபனில் இருந்து விலகியதால், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பிரதான சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். இத்தாலி ஓபன் முதல் சுற்றில் வென்றதால், விம்பிள்டன் தொடருக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.      

முர்ரே ‘அவுட்’

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், உலகின் ‘நம்பர்–1’ பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 29வது இடத்தில் உள்ள இத்தாலியின் பேபியோ போக்னினி மோதினர். இதில் முர்ரே 2–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?