Advertisement


போபண்ணா ஜோடி ஏமாற்றம்

மே 17, 2017.
 Comments [1]  
 


Rohan Bopanna, Pablo, Italy Open Masters Tennis
 

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ ஜோடி தோல்வி அடைந்தது.

இத்தாலி தலைநகர் ரோமில், இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ ஜோடி, பிரான்சின் பியர்ரி–ஹியுஸ் ஹெர்பர்ட், நிகோலஸ் மகுத் ஜோடியை சந்தித்தது.

‘டை–பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 6–7 என இழந்த போபண்ணா ஜோடி, ‘டை–பிரேக்கர்’ வரை நீடித்த இரண்டாவது செட்டை 7–6 எனக் கைப்பற்றி பதிலடி தந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை–பிரேக்கர்’ சுற்றில் ஏமாற்றிய போபண்ணா ஜோடி 10–12 என போராடி இழந்தது.

முடிவில்  போபண்ணா, பாப்லோ ஜோடி 6–7, 7–6, 10–12 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது.

நடால் தோல்வி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தியாம் மோதினர். இதில் நடால் 4–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம், தொடர்ச்சியாக 17 போட்டிகளில் வென்ற நடாலின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
SARAVANAN SUBBAMANI 5 days ago | Report abuse
வாழ்த்துகள்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?