Advertisement


ஆசை ஆசையாய்...

மே 16, 2017.
 Comments  
 


dhoni
 

தோனியை பொறுத்தவரை குடும்பம், குழந்தையை விட கிரிக்கெட் தான் முக்கியம். ஆசை ஆசையாய் கட்டிய வீட்டின், புதுமனை புகுவிழாவுக்கு செல்லாமல் ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்றார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 35.  தற்போது ஐ.பி.எல்., தொடரில் புனே அணிக்காக விளையாடுகிறார். ஜார்க்கண்ட்டை சேர்ந்த இவர், ராஞ்சி சுற்று வட்டச்சாலை பகுதியில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் ‘கைலாஷ்பதி’ என்ற பெயரில் பண்ணை வீடு கட்டினார். கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி, தனது பிறந்தநாளில் இந்த வீடு குறித்த செய்தியை வெளியிட்டார்.

இதில் உள்ளரங்க மைதானம், நீச்சல் குளம், வலைப்பயிற்சி செய்யும் வசதி, நவீன ஜிம்முடன், இந்த வளாகத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டலும் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டில் தனது பெற்றோர் பான் சிங் தோனி, தேவகி தேவி, மனைவி சாக் ஷி, குழந்தை ஜிவாவுடன் வசிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கான புதுமனை புகுவிழா சமீபத்தில் நடந்தது. அப்போது பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் தோனி பங்கேற்க வேண்டியது இருந்தது.

இதனால், பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு செல்ல முடியவில்லை. இவரது குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர்.

இதற்கு முன்...

கடந்த 2015 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. அப்போது தோனிக்கு  மகள் ஜிவா பிறந்தார். இருப்பினும், உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு தான் இந்தியா வந்து முதன் முறையாக மகளை பார்த்தார். இதுபோல, ஐ.பி.எல்., தொடருக்குப் பின், தனது புதிய பண்ணை வீட்டில் குடியேறுகிறார் தோனி.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?