Advertisement


வாட்சன் அடுத்த அவதாரம்

மே 16, 2017.
 Comments  
 


watson
 

பெங்களூரு அணி வீரர் வாட்சன், எதிர்காலத்தில் பயிற்சியாளராக பணியாற்ற விரும்புகிறார்

ஆஸ்திரேலிய அணி முன்னாள் ‘ஆல்–ரவுண்டர்’ ஷேன் வாட்சன், 35. நெருக்கடியான நிலையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கில்லாடி.  ஐ.பி.எல்., தொடர் இவருக்கு சாதகமாக அமையவில்லை.  7 போட்டியில் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

வாட்சன் கூறியது: நான் விளையாடிய ஐ.பி.எல்., தொடர்களில் இம்முறைதான் மோசமானதாக அமைந்தது.ஒட்டுமொத்த பெங்களூரு அணியும் ஏமாற்றியது. இத்தொடருக்கு முன் போதிய பயிற்சி இல்லாதது முக்கியக்காரணம். சர்வதேச அரங்கிலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடை பெற்றேன். இதன்பின், உலகம் முழுவதும் பல்வேறு லீக் தொடர்களில் விளையாடினேன். ஆனால், ஐ.பி.எல்., தொடர் துவங்கிய ஒரு மாதத்திற்கு முன், எவ்வித போட்டியிலும் விளையாடவில்லை. பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தது தவறாக அமைந்துவிட்டது. இதிலிருந்து நல்ல பாடம் கற்றுக்கொண்டேன்.

ரசிகர்களின் ஆதரவு:

கடந்த 2008 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணியில் விளையாடினேன். அப்போது, ஜெய்ப்பூரை தாண்டி மற்ற மைதானங்களில் பங்கேற்றபோது, ரசிகர்கள் ஆதரவு இருக்காது. ஆனால், கடந்த இரண்டு ‘சீசனில்’ கோல்கட்டாவில் விளையாடினால் கூட, பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் இருப்பர். கடந்த முறை பைனலுக்கு சென்றோம். தற்போது, லீக் சுற்றுடன் நடையைக்கட்டினோம். இந்த இரண்டு சூழ்நிலையிலும் பெங்களூரு ரசிகர்கள் மாறவே இல்லை. ஒரே மாதிரியான ஆதரவைத்தான் தந்தனர்.

விருப்பம்:

எதிர்காலத்தில் பயிற்சியாளராக பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். என்னிடம் அதிக அனுபவம் உள்ளது. இதை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு உதவ எண்ணுகிறேன். எந்த அணிக்கு, எப்போது பயிற்சியாளராக  பொறுப்பு ஏற்பேன் எனத்தெரியவில்லை. இவ்வாறு வாட்சன் கூறினார். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?