Advertisement


கால்பந்து இணையதளம் முடக்கம்

மே 10, 2017.
 Comments  
 


All India Football Federation, Website Hackers
 

புதுடில்லி: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் இணையதளத்தை ‘ஹேக்கர்ஸ்’ முடக்கினர்.            

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) உள்ளூர் போட்டிகளை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கட்டாக்கில் நடந்த ‘பெடரேஷன்’ கோப்பை போட்டிக்கான தகவல்களை ஊழியர்கள் ஏ.ஐ.எப்.எப்., இணையதளத்தில் ‘அப்டேட்’ செய்து கொண்டிருந்தனர். திடீரென இப்பணியில் சிக்கல் ஏற்பட்டது.             

பின்தான், இணையதளத்தை ‘ஹேக்கர்ஸ்’ தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், பாகிஸ்தானில் துாக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட இந்திய முன்னாள் கப்பல் படை அதிகாரி  குல்புஷன் ஜாதவ் தொடர்பாக அவதுாறாக எழுதி இருந்தனர். இதன் அடிப்படையில் ‘ஹேக்கர்ஸ்’ பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பின் இந்த இணையதளம் வழக்கம் போல் பயன்பாட்டிற்கு வந்தது. பிரச்னை தொடர்பாக ஏ.ஐ.எப்.எப்., சார்பில் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?