Advertisement


சுப்ரதாவுக்கு 3 வார அவகாசம்

மே 10, 2017.
 Comments  
 


Subrata Pal, Football, India
 

மும்பை: ஊக்க மருந்து விவகாரத்தில் விளக்கம் அளிக்க கோல்கீப்பர் சுப்ரதா பாலுக்கு மூன்று வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.     இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர கோல்கீப்பர் சுப்ரதா பால், 30. சமீபத்தில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் (நாடா) சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கினார். இவரின் ‘ஏ’ சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட ‘டெர்புடாலின்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சு திணறல் பிரச்னைகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்த முன் அனுமதி பெற தவறினார் சுப்ரதா. தனது  ‘பி’ சிறுநீர் மாதிரியையும் தரவில்லை. இந்நிலையில், மூன்று வாரத்திற்குள் ‘நாடா’ முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.      

இது குறித்து ‘நாடா’ தலைவர் நவீன் அகர்வால் கூறுகையில்,‘‘  ஊக்கமருந்து தடுப்புக்குழு முன் அடுத்த மூன்று வாரங்களுக்குள் சுப்ரதா ஆஜராக வேண்டும்.  விசாரணைக்கான தேதி அறவிக்கப்படும். இக்குழுவின் தீர்ப்பு வெளியாகும் வரை சுப்ரதா விளையாடலாம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?