Advertisement


இணையுமா ‘ஐ–லீக்’ – ‘ஐ.எஸ்.எல்.,’

மே 06, 2017.
 Comments  
 


I LEAGUE, ISL link india football
 

 மும்பை: ‘ஐ–லீக்’ – ‘ஐ.எஸ்.எல்.,’ கால்பந்து தொடர்களை ஒன்றாக இணைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை எனத் தெரிகிறது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் நடத்தப்படும் உள்ளூர் கால்பந்து தொடர் ‘ஐ–லீக்’. கடந்த 2007 முதல் நடக்கும் இத்தொடரில் 10 அணிகள் மோதும்.

இதனிடையே, ஐ.பி.எல்., பாணியில் கடந்த 2013 ல் துவங்கப்பட்டது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) தொடர். கவர்ச்சிகரமான விளம்பரங்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்பு காரணமாக, 8 அணிகள் பங்கேற்கும், ஐ.எஸ்.எல்., தொடர் பெரும் வரவேற்பு பெற்றது.

இதனால், ‘ஐ–லீக்’ – ‘ஐ.எஸ்.எல்.,’ தொடர்களை ஒன்றாக இணைப்பது குறித்து பேச்சு நடந்தது. வரும் ஆண்டில் இருந்து, இரு தொடர்களையும் இணைத்து, 11 அணிகள் பங்கேற்கும் வகையில் மாற்ற திட்டமிட்டு இருந்தனர். தற்போது இதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து ஏ.ஐ.எப்.எப்., தலைவர் பிரபுல் படேல் கூறியது:

ஏ.ஐ.எப்.எப்., சார்பில் நடக்கும் ‘ஐ–லீக்’ தொடர் தொடர்ந்து நடக்கும். அதேநேரம், ஐ.எஸ்.எல்., தொடரை ஆண்டுக்கு 7 மாதங்கள் வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் போட்டிகள் நடக்கும். மற்றபடி, இரு தொடர்களையும் ஒன்றாக இணைக்கும் திட்டம் கிடையாது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்குப் பின் இது குறித்து பேசுவோம்.

இவ்வாறு பிரபுல் படேல் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?