Advertisement


செய்னாவாக ஸ்ரதா

ஏப்ரல் 26, 2017.
 Comments  
 


Shraddha Kapoor is playing Saina Nehwal in biopic
 

மும்பை: பாலிவுட் நடிகை ஸ்ரதா கபூர், பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் வேடத்தில் நடிக்க உள்ளார். 

இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் குறித்து வெ ளியாகும் சினிமா நல்ல வரவேற்பு பெறுகிறது. மில்கா சிங் (தடகளம்), மேரி கோம் (குத்துச்சண்டை), தோனி (கிரிக்கெட்) படங்களைத் தொடர்ந்து விரைவில், சச்சின் சினிமா வரவுள்ளது.

இந்த வரிசையில் இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், 27, வாழ்க்கை குறித்து சினிமா எடுக்கப்படுகிறது. இப்படத்தில் செய்னா வேடத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை ஸ்ரதா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

வரும் 2018ல் வெ ளியாகும் இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்க அமோல் குப்தே இயக்குகிறார். இதுகுறித்து ஸ்ரதா கபூர் கூறுகையில்,‘‘ பெரும்பாலான பெண்கள் ஏதாவது சில நாட்களில் பாட்மின்டன் விளையாடி இருப்பர். தற்போது செய்னா வேடத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் தான். ஏனெனில் இவர் ‘நம்பர்–1’ வீராங்கனை மட்டுமல்ல, இளைஞர்களின் அடையாளமாக திகழ்கிறார். ஷூட்டிங் தொடங்கும் வகை என்னால் காத்திருக்க முடியவில்லை,’’ என்றார்.

செய்னா மகிழ்ச்சி:

இதுகுறித்து செய்னா கூறுகையில்,‘‘ ஸ்ரதா கபூர் திறமையான நடிகை. எனது தோழியும் கூட. நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதாக பலர் சொல்வர். தன்னை இப்படத்துக்கு தேர்வு செய்ததை நியாயப்படுத்தும் வகையில் இவர், சிறப்பாக நடிப்பது உறுதி,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?