Advertisement


வயிற்றில் கரு... அசத்திய செரினா

ஏப்ரல் 20, 2017.
 Comments  
 


Serena Williams World number two pregnancy is confirmed
 

புதுடில்லி: டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், 8 வாரக் கருவுடன், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்று கோப்பை வென்றுள்ளார். 

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், 35. உலகத் தரவரிசையில் தற்போது ‘நம்பர்–2’ ஆக உள்ளார். வரும் வாரம் வௌியாகவுள்ள டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்தை பிடிக்கவுள்ளார். செரினா, ரெட்டிட் நிறுவனத்தின் சக உரிமையாளர் அலெக்ஸ் ஒஹானியன், திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2016 டிசம்பரில் நடந்தது.

சாதனை சமன்:

இதன் பின் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்றார். பைனலில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை வென்று, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 23 வது பட்டம் கைப்பற்றி, ஸ்டெபி கிராப் சாதனையை சமன் செய்தார். இதன் பின் முழங்கால் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் உள்ள செரினா வௌியிட்ட ‘ஸ்னாப் ஷாட்’ படத்தில், ‘20 வாரங்கள்’ என, தலைப்பிட்டிருந்தார்.

இது உண்மை:

இதனால் செரினா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவின. உடனடியாக இப்படத்தை செரினா நீக்கி விட்டார். இதனிடையே, செரினாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் செய்தித் தொடர்பாளர் கெல்லி புஷ் நோவக் வெளியிட்ட செய்தியில்,‘ செரினா தாயாகப் போவது உண்மை தான். இதை உறுதி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,’ என, தெரிவித்தார்.

இதையடுத்து செரினா, 20 வாரங்கள் கர்ப்பமாக இருப்பது உறுதியாகிறது. தவிர, ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது, இவர் சுமார் 8 வார கருவுடன் இருந்துள்ளார். தொடர் நடந்த இரு வாரங்களிலும், வயிற்றில் இரண்டு மாத கருவை சுமந்து கொண்டு, களத்தில் கடுமையாக போராடி வெற்றி பெற்றுள்ளார் என, இப்போது தெரியவந்துள்ளது.

இனி எப்போது:

செரினா தாயாக இருப்பதால் இந்த ஆண்டு இனி எவ்வித போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார். அடுத்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஒருவேளை, இவர் விளையாடலாம் எனத் தெரிகிறது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?