Advertisement


டுமினி விலகல்

மார்ச் 20, 2017.
 Comments  
 


JP Duminy pulls 0ut of IPL 2017
 

புதுடில்லி: டில்லி ஐ.பி.எல்., அணியில் இருந்து டுமினி விலகினார்.

தென் ஆப்ரிக்க வீரர் டுமினி, 32. ஐ.பி.எல்., தொடரில் மும்பை (2009–10), டெக்கான் சார்ஜர்ஸ் (2011–12) மற்றும் ஐதராபாத் (2013) அணிக்காக விளையாடியவர். 2014 முதல் டில்லி அணியில் இணைந்த இவர், 2015ல், கேப்டனாக களமிறங்கினார்.

இதுவரை டில்லி அணிக்காக 1,015 ரன்கள் (சராசரி 44.13 ரன்) எடுத்த இவர், கடந்த ஆண்டு சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார். இந்த ஆண்டு டில்லி அணியில் விளையாட இருந்த நிலையில், திடீரென, அணியில் இருந்து விலகினார்.

இதுகுறித்து அவர் வெ ளியிட்ட செய்தியில்,‘ இது கடினமான முடிவு தான். தனிப்பட்ட காரணங்களுக்காக விலக நேரிட்டது. எதிர்காலத்தில் இத்தொடரில் பங்கேற்பேன் என நம்புகிறேன்,’ என, தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?