Advertisement


'நட்பு' கால்பந்து: இந்தியா பங்கேற்பு

மார்ச் 20, 2017.
 Comments  
 


Indian Football Team to Play Friendlies Against Lebanon, Palestine
 

புதுடில்லி: லெபனான், பாலஸ்தீன அணிகளுடன் இந்திய கால்பந்து அணி, 'நட்பு' போட்டியில் பங்கேற்கிறது.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி வரும் 2019, ஜன., 5-பிப்., 1ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதற்கான மூன்றாவது சுற்று (28, மார்ச்-2017 முதல் 27 மார்ச்-2018 வரை)  தகுதிப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி 'ஏ' பிரிவில் கிர்கிஸ்தான், மியான்மர், மக்காவு அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. தனது முதல் போட்டியில் வரும் 28ம் தேதி மியான்மரை சந்திக்கிறது.

இதற்குத் தயாராகும் வகையில் நாளை, கம்போடியா அணிக்கு எதிரான 'நட்பு' போட்டியில் இந்தியா விளையாடுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தற்போது கம்போடியா சென்றுள்ளனர்.

இதனிடையே, வரும் ஜூன் 7ல் லெபனான், அக்., 2ல் பாலஸ்தீனம் என, இரு அணிகளுடன் 'நட்பு' போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. போட்டி நடக்கும் இடங்கள் இன்னும் முடிவாகவில்லை.

இதுகுறித்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு செயலர் குஷால் தாஸ் கூறுகையில்,'' இந்திய அணியை சிறப்பான முறையில் உருவாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம். வரும் இரண்டு 'நட்பு' போட்டிகள், ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் சாதிக்க கைகொடுக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?