Advertisement


பார்சிலோனா அணி வெற்றி

மார்ச் 20, 2017.
 Comments  
 


La Liga Soccer, Messi, Barcelona, Valencia
 

பார்சிலோனா: வாலன்சியா அணிக்கு எதிரான ‘லா லிகா’ கால்பந்து லீக் போட்டியில் மெஸ்சி இரண்டு கோல் அடித்து கைகொடுக்க, பார்சிலோனா அணி 4–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஸ்பெயினில், உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ‘லா லிகா’ கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன.

பார்சிலோனா நகரில் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, வாலன்சியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் பார்சிலோனா அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பார்சிலோனா சார்பில் லுாயிஸ் சாரஸ் (35வது நிமிடம்), மெஸ்சி (45, 52வது நிமிடம்), ஆன்ட்ரி கோமஸ் (89வது நிமிடம்) கோல் அடித்தனர். வாலன்சியா அணிக்கு மங்கலா (29வது நிமிடம்), முனிர் (45+வது நிமிடம்) ஆறுதல் தந்தனர்.

பார்சிலோனா அணி, இதுவரை விளையாடிய 28 லீக் போட்டியில் 19 வெற்றி, 6 ‘டிரா’, 3 தோல்வி என 63 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் அணி (27 போட்டி, 20 வெற்றி, 5 ‘டிரா’, 2 தோல்வி) 65 புள்ளிகளுடன் உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?