Advertisement


டிராவிட் சாதனை முறியடிப்பு

மார்ச் 19, 2017.
 Comments [1]  
 


India, Australia, Ranchi Test, Cricket
 

ராஞ்சி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடக்கும் 3வது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் புஜாரா, சகா படைத்த சாதனைகளின் விவரம்:

525 பந்துகள்

டெஸ்ட் அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை (525 பந்து) சந்தித்த இந்திய வீரரானார் புஜாரா. இதற்கு முன், டிராவிட் (495 பந்து, எதிர்–பாக்., 2004) இச்சாதனை படைத்திருந்தார். நவ்ஜோத் சித்து (491 பந்து, எதிர்–வெ.இண்டீஸ், 1997), ரவி சாஸ்திரி (477 பந்து, எதிர்–ஆஸி., 1992), கவாஸ்கர் (472 பந்து, எதிர்–இங்கிலாந்து, 1981) ஆகியோரும் அதிக பந்துகளை சந்தித்த பெருமை பெற்றுள்ளனர்.

4வது வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 500 பந்துகளுக்கு மேல் (525) சந்தித்த 4வது வீரரானார் புஜாரா. இதற்கு முன், இங்கிலாந்தின் லியானர்டு ஹட்டன் (847 பந்து, ஓவல், 1938), கென் பேரிங்டன் (624, மான்செஸ்டர், 1964), ஹாமண்ட் (3 முறை– 605 பந்து,  சிட்னி, 1928, 603, அடிலெய்டு, 1929, 579, சிட்னி, 1936) இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

3வது இடம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக முறை இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தை இந்தியாவின் லட்சுமண், சச்சின், தென் ஆப்ரிக்காவின் போலாக் ஆகியோருடன் புஜாரா பகிர்ந்து கொண்டார். இவர்கள் தலா 2 முறை இரட்டை சதம் எட்டியுள்ளனர். முதலிரண்டு இடங்களில் இங்கிலாந்தின் ஹாமண்ட் (4), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (3) உள்ளனர்.

11 இரட்டை சதம்

இந்தியாவின் புஜாரா டெஸ்டில் 3, ரஞ்சியில் 5, இந்தியா ‘ஏ’ சார்பில் 2, துலீப் டிராபியில் ஒன்று என முதல் தர போட்டியில் மொத்தம் 11 இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலம், முதல் தர போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை விஜய் மெர்ச்சன்டுடன் பகிர்ந்து கொண்டார்.

* விஜய் ஹசாரே, கவாஸ்கர், டிராவிட் தலா 10 முறை இரட்டை சதம் அடித்துள்ளனர். 

210 ஓவர்

ஒட்டுமொத்த டெஸ்ட் அரங்கில் இந்திய அணி ஒரே இன்னிங்சில் அதிக ஓவரை (210) சந்தித்த போட்டிகள் பட்டியலில் இது 4வது இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களில் டில்லி (241.5, எதிர்– நியூசி., 1955), சென்னை (227, எதிர்–பாக்., 1961), கொழும்பு (225.2, எதிர்– இலங்கை, 2010)  டெஸ்ட் போட்டிகள் உள்ளன.

2வது பவுலர்

இந்திய மண்ணில் ஒரே இன்னிங்சில் அதிக ஓவரை (77) வீசிய இரண்டாவது பவுலரானார் ஓ கீபே. முதலிடத்தில் பாகிஸ்தானின் ஹசின் ஆஷான் (84 ஓவர், சென்னை, 1961) உள்ளார்.

7வது விக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7வது விக்கெட்டுக்கு அதிக ரன் (199) ஜோடி என்ற பெருமையை புஜாரா, சகா பெற்றனர். அடுத்த இரு இடங்களில் ஹேமு அதிகாரி, விஜய் ஹசாரே (132, அடிலெய்டு, 1948), தோனி, கங்குலி (109, மொகாலி, 2008) ஜோடி உள்ளது.

521வது பந்து

டெஸ்ட் அரங்கில் இரட்டை சதம் அடிக்க அதிக பந்துகள் (521) எடுத்துக்கொண்ட இந்திய வீரரானார் புஜாரா. இதற்கு முன், நவ்ஜோத் சித்து இந்த இலக்கை எட்ட 488 பந்துகள் (போர்ட் ஆப் ஸ்பெயின், 1997, எதிர்– வெ,இண்டீஸ்) எடுத்துக்கொண்டார்.

4வது இந்தியர்

ஒரே ‘சீசனில்’ (2016–17) முதல் தர போட்டியில் 2 ஆயிரம் ரன்களுக்கு அதிகமாக (2007) எடுத்த 4வது இந்திய வீரரானார் புஜாரா. இதற்கு முன், மொகிந்தர் அமர்நாத் (1982–83, 2234 ரன்கள்), கவாஸ்கர் (1978–79, 2121), அசார் (1991, 2016 ரன்) எடுத்தனர்.

2வது இடம்

அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் வரிசையில் சகா இரண்டாவது இடத்தை (3) பிடித்தார். முதலிடத்தில் முன்னாள் கேப்டன் தோனி (6) உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?