Advertisement


கோப்பை வென்றது தமிழகம் * தினேஷ் கார்த்திக் சதம்

மார்ச் 19, 2017.
 Comments [2]  
 


Vijay Hazare Trophy, Cricket, Final, Tamil Nadu, Bengal
 
புதுடில்லி: விஜய் ஹசாரே டிராபி தொடரில் தமிழக அணி கோப்பை வென்றது.  பைனலில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை தோற்கடித்தது. சதம் கடந்த தினேஷ் கார்த்திக் வெற்றிக்கு கைகொடுத்தார்.

டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) பைனலில், தமிழகம், பெங்கால் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

தமிழக அணிக்கு டிண்டா, முகமது ஷமி தொல்லை தந்தனர். டிண்டா 'வேகத்தில்' கவுசிக் காந்தி (15), கங்கா ஸ்ரீதர் ராஜு (4), கேப்டன் விஜய் சங்கர் (2) வெளியேறினர். முகமது ஷமி பந்தில் பாபா அபராஜித் (5) அவுட்டானார். தமிழக அணி 4 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்து திணறியது. பின் இணைந்த தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித் சரிவிலிருந்து அணியை மீட்டது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த போது இந்திரஜித் (32) 'ரன்-அவுட்' ஆனார். வாஷிங்டன் சுந்தர் (22), அஸ்வின் கிறிஸ்ட் (10) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மறுமுனையில் அசத்திய தினேஷ் கார்த்திக் சதமடித்தார். முகமது ஷமி 'வேகத்தில்' முகமது (3), சாய் கிஷோர் (0), தினேஷ் கார்த்திக் (112) அவுட்டாகினர்.

தமிழக அணி 47.2 ஓவரில் 217 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பெங்கால் அணி சார்பில் முகமது ஷமி 4, டிண்டா 3 விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்கால் அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் (1), அக்னிவ் பான் (0) மோசமான துவக்கம் தந்தனர். ஸ்ரீவஸ்தவ் கோஸ்வாமி (23), கேப்டன் மனோஜ் திவாரி (32), மஜும்தார் (24) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய சுதிப் சாட்டர்ஜீ (58) ஆறுதல் தந்தார். முகமது ஷமி (8), பிரக்யான் ஓஜா (7), டிண்டா (0) ஏமாற்றினார்.

பெங்கால் அணி 45.5 ஓவரில் 180 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வி அடைந்தது. தமிழகம் சார்பில் அஸ்வின் கிறிஸ்ட், முகமது, ராஹில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


ஐந்தாவது முறை

தமிழக அணி 5வது முறையாக (2002-03, 2004-05, 2008-09, 2009-10, 2016-17) விஜய் ஹசாரே டிராபி வென்றது. இதில் 2004-05 சீசனில் தமிழகம், உ.பி., அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

* தவிர, இத்தொடரில் அதிக முறை (5) கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மும்பை (2003-04, 2006-07), கர்நாடகா (2013-14, 2014-15) அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன.

 

மூன்றாவது முறை

விஜய் ஹசாரே டிராபி பைனலில் தமிழக அணி, மூன்றாவது முறையாக பெங்கால் அணியை தோற்கடித்தது. இதற்கு முன், 2008-09, 2009-10 சீசனில் வீழ்த்தியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?