Advertisement


வெண்கலம் வென்றார் இர்பான்: ஆசிய நடை போட்டியில் அபாரம்

மார்ச் 19, 2017.
 Comments  
 


KT Irfan, Asia 20 Km Walk Race Championships
 

நோமி: ஆசிய 20 கி.மீ., நடை போட்டியில் இந்திய வீரர் இர்பான் வெண்கலம் வென்றார்.

ஜப்பானில் உள்ள  நோமி நகரில், ஆசிய நடை போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் ஆண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 20 நிமிடம், 59 வினாடியில் கடந்த இந்தியாவின் கே.டி. இர்பான், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இவர், கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் இந்த இலக்கை ஒரு மணி நேரம், 20 நிமிடம், 21 வினாடியில் கடந்து 10வது இடம் பிடித்திருந்தார்.

கடந்த மாதம் நடந்த தேசிய நடை போட்டி சாம்பியன்ஷிப் தொடரில், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 22 நிமிடம், 43.48 வினாடியில் கடந்த இர்பான், ஏற்கனவே வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.

முதலிரண்டு இடங்களை முறையே தென் கொரியாவின் கிம் ஹயுன்–சப் (ஒரு மணி நேரம், 19 நிமிடம், 50 வினாடி), கஜகஸ்தானின் ஜியார்ஜி ஷிய்கோ (ஒரு மணி நேரம், 20 நிமிடம், 47 வினாடி) கைப்பற்றி பதக்கம் வென்றனர்.

பிரியங்கா ஏமாற்றம்: பெண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 37 நிமிடம், 42 வினாடியில் கடந்த இந்தியாவின் பிரியங்கா, 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்ல தவறினார். முதல் மூன்று இடங்களை முறையே சீனாவின் வாங் நா (ஒரு மணி நேரம், 30 நிமிடம், 51 வினாடி), ஜப்பானின் குமிகோ ஒகாடா (ஒரு மணி நேரம், 33 நிமிடம், 31 வினாடி), தென் கொரியாவின் ஜியோன் (ஒரு மணி நேரம், 34 நிமிடம், 35 வினாடி) ஆகியோர் பிடித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?