Advertisement


அயர்லாந்து அசத்தல் வெற்றி

மார்ச் 19, 2017.
 Comments  
 


Ireland, Afghanistan, One Day Cricket
 

கிரேட்டர் நொய்டா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஸ்டிர்லிங், பால்பிர்னீ அரைசதம் கடந்து கைகொடுக்க, அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. மூன்றாவது போட்டி, உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடந்தது.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது ஷாஜத் (11), நுார் அலி ஜத்ரான் (1), ரஹ்மத் ஷா (8), கேப்டன் ஸ்டானிக்ஜாய் (16) ஏமாற்றினர். குல்பதின் நைப் (51), ரஷித் கான் (56), ஷபியுல்லா (50*) கைகொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு எட் ஜாய்ஸ் (12), கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு (1) ஏமாற்றினர். நியால் ஓபிரையான் (30) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய பால் ஸ்டிர்லிங் (99) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையில் அசத்திய பால்பிர்னீ, அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.

அயர்லாந்து அணி 48.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பால்பிர்னீ (85), வில்சன் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.

இப்போட்டியில் தோல்வி அடைந்த போதும், ஆப்கானிஸ்தான் அணி 2–1 என முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருதை அயர்லாந்தின் ஸ்டிர்லிங் வென்றார். நான்காவது போட்டி வரும் 22ல் கிரேட்டர் நொய்டாவில் நடக்கவுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?