Advertisement


முரளி விஜய் ‘10’

மார்ச் 18, 2017.
 Comments  
 


murali vijay
 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 10வது முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்களை (139, 167, 153, 57, 53, 99, 144, 68, 80, 82) எடுத்தார் இந்திய வீரர் முரளி விஜய். வேறு எந்த அணிக்கு எதிராகவும் இவர் 5 முறைக்கும் மேல் இதுபோல ரன்கள் எடுத்தது இல்லை.

12

உணவு அல்லது தேநீர் இடைவேளைக்கு சற்று முன் அல்லது துவங்கிய சிறிது நேரத்தில் முரளி விஜய், இந்த சீசனில் மட்டும் 12 வது முறையாக அவுட்டானார்.

2

முரளி விஜய்–புஜாரா (10 இன்னிங்சில், 954 ரன்) இணைந்து ஒரு சீசனில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி வரிசையில் 2வது இடம் பிடித்தது. இதில், டிராவிட்–காம்பிர் ஜோடி (14 இன்னிங்ஸ், 961 ரன், 2008–09) முதலிடத்தில் உள்ளது. 3வது இடத்தில் சேட்டன் சவுகான்–கவாஸ்கர் ஜோடி (14 இன்னிங்ஸ், 919 ரன், 1978–79) உள்ளது.

6

ராஞ்சி டெஸ்டில் முரளி விஜய், புஜாரா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. 2016–17 சீசனில் மட்டும், 100 ரன்கள் அல்லது அதற்கு மேல் என, இந்த ஜோடி 6வது முறையாக எடுத்தது. இதற்கு முன் 2005–06 சீசனில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங்–ஹைடன் ஜோடி 7 முறை, 100க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தது.

7

ஒரு முதல் தர சீசனில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் புஜாரா (16 போட்டி, 7 சதம் உட்பட 1914 ரன்) 2வது இடத்தை, கவாஸ்கர், பட்டோடி (தலா 7) பகிர்ந்து கொண்டார். இவ்வரிசையில், 8 சதம் அடித்த லட்சுமண், முதலிடத்தில் உள்ளார்.

9

கடந்த 2006–2010ல் இந்திய டெஸ்ட் அணியின் ‘டாப்–3’ வீரர்களும், 8 முறை 50 அல்லது அதற்கும் மேல் ரன்கள் எடுத்தனர். கடைசியாக 2010ல் நியூசிலாந்துக்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் இதுபோல நிகழ்ந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது 9வது முறையாக ‘டாப்–3’ வீரர்கள் 50க்கும் ரன்கள் எடுத்தனர்.

1185

நேற்று சதம் அடித்த புஜாரா (1185), ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் காம்பிர் (1269 ரன், 2008–09), கோஹ்லி (1252, 2016–17), டிராவிட் (1241, 2003–04) உள்ளனர். சேவக் (1105 ரன், 2004–05), கவாஸ்கர் (1027, 1979–80) 5, 6வது இடத்தில்உள்ளனர்.

தொடரும் சோகம்

வெஸ்ட் இண்டீஸ் (200), நியூசிலாந்து (211), இங்கிலாந்து (235) மற்றும் வங்கதேசம் (204) என, தொடர்ந்து நான்கு தொடர்களில் நான்கு இரட்டை சதம் அடித்து சாதித்தவர் இந்திய அணி கேப்டன் கோஹ்லி. இம்முறை ஆஸ்திரேலிய தொடரில் என்ன ஆனது எனத் தெரியவில்லை. கடந்த 5 இன்னிங்சில் இவர், 0, 13, 12, 15, 6 ரன் என, ஒருமுறை கூட 50 ரன்களை எட்டவில்லை.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்த அணிக்கு எதிராக கோஹ்லி விளையாடிய 16 இன்னிங்சில் 992 ரன்கள் (5 சதம், 2 அரைசதம்) எடுத்தார். சொந்தமண்ணில் 11 இன்னிங்சில் 330 ரன்கள் (1 சதம், 1 அரைசதம்) தான் எடுத்துள்ளார்.

வீணடித்த ஸ்மித்

பெங்களூரு டெஸ்டில் அம்பயர் தீர்ப்பை எதிர்த்து (‘டி.ஆர்.எஸ்.,) முறையீடு செய்ய ‘டிரசிங் ரூமிடம்’ அனுமதி கேட்ட கேப்டன் ஸ்மித் (ஆஸி.,) செயல் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நெருக்கடியால் ராஞ்சி டெஸ்டில் அப்பீல் செய்ய தடுமாறுகிறார் போல. இந்திய அணி முதல் இன்னிங்சில் முரளி விஜய் 41 ரன் எடுத்த போது, லியான் பந்தில் ஸ்மித் கேட்ட அப்பீல் வீணானது. நேற்று புஜாராவுக்கு (22 ரன்) ஓ கீபே பந்தில் செய்ய அப்பீலும் தவறாகிப் போனது. இதை ‘டிரசிங் ரூமில்’ இருந்து பார்த்த கோஹ்லி, கைதட்டி மகிழ்ந்தார்.

இந்நிலையில் லியான் பந்தில், முரளி விஜய் (58) பிடிபட்டார். இதற்கு அம்பயர் இயான் கோல்டு அவுட் தர மறுத்தார். ஏற்கனவே இரு வாய்ப்புகளை ஸ்மித் வீணடித்ததால் அப்பீல் செய்ய முடியவில்லை. ‘ரீப்ளேயில்’ பந்து பேட்டில் பட்டுச் சென்றது தௌிவாகத் தெரிந்தது. 

எல்லை மீறலாமா மேக்ஸ்வெல்

பவுண்டரி எல்லையில் பாய்ந்து’ பந்தை தடுக்க முயன்ற கோஹ்லி, வலது தோளில் காயம் ஆனார். நேற்று கம்மின்ஸ் பந்தை அடித்தார் புஜாரா. இதை விரட்டிச் சென்ற மேக்ஸ்வெல், கோஹ்லியை போல வேகமாக பாய்ந்து தடுத்தார். பின் எழுந்த இவர், கோஹ்லியைப் போல தோளை பிடித்துக் கொண்டு, எனக்கு காயம் ஏற்படவில்லை என்பது போல ‘சைகை’ செய்தார். இதைப்பார்த்து ஸ்மித் சிரித்தார்.

இவரது செயல் காயமடைந்த கோஹ்லியை கேலி செய்வது போல இருந்தது. இதற்கு சமூகவலைதளத்தில் மேக்ஸ்வெல்லுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?