Advertisement


ராஞ்சி டெஸ்ட் ‘டிரா’

மார்ச் 18, 2017.
 Comments  
 


India, Australia, Ranchi Test, Cricket
 
ராஞ்சி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 451, இந்தியா 603/9 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. ரென்ஷா (7) அவுட்டாகாமல் இருந்தார்.

இன்று 5ம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ரென்ஷா, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாடினர். இந்நிலையில் இஷாந்த் பந்தில் ரென்ஷா (15) அவுட்டானார். ஜடேஜா ‘சுழலில்’ ஸ்டீவ் ஸ்மித் (21) சிக்கினார். பின் இணைந்த ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி, இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து முன்னிலை பெற்றுத் தந்தது. பொறுப்பாக ஆடிய ஹேண்ட்ஸ்கோம்ப் அரைசதமடித்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஷான் மார்ஷ், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த போது ஷான் மார்ஷ் (53) அவுட்டானார். மேக்ஸ்வெல் (2) ஏமாற்றினார்.

கடைசி நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து, 52 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. இதனையடுத்து போட்டி ‘டிரா’ ஆனது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (72), மாத்யூ வேட் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement