Advertisement


பெடரர் சாம்பியன்: பரிபாஸ் ஓபனில் அசத்தல்

மார்ச் 18, 2017.
 Comments  
 


Roger Federer, Indian Wells Open, Tennis
 

இந்தியன் வெல்ஸ்: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், சகவீரர் வாவ்ரின்காவை வீழ்த்தினார்.      

அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், வாவ்ரின்கா மோதினர்.      

அபாரமாக ஆடிய பெடரர் 6–4, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 5வது முறையாக (2004–06, 2012, 2017) சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இத்தொடரின் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் (2008, 2011, 2014–16) முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 5 முறை கோப்பை வென்றுள்ளனர்.      

தவிர, அதிக வயதில் மாஸ்டர்ஸ் அந்தஸ்து பெற்ற ஏ.டி.பி., தொடரில் கோப்பை வென்ற வீரர் என்ற பெருமை பெற்றார் பெடரர், 35. இதற்கு முன், அமெரிக்காவின் ஆன்ட்ரி அகாசி, 34 வயதில் சின்சினாட்டி ஓபனில் (2004) சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.      

இது, ஏ.டி.பி., அரங்கில் வாவ்ரின்காவுக்கு எதிராக பெடரர் பெற்ற 20வது வெற்றி. இதுவரை இவர்கள் இருவரும் 23 முறை மோதியுள்ளனர். இதில் பெடரர் 20, வாவ்ரின்கா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.      

வெஸ்னினா அபாரம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் கஸ்னட்சோவா, எலினா வெஸ்னினா மோதினர். அசத்தலாக ஆடிய வெஸ்னினா 6–7, 7–5, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?