Advertisement


அரையிறுதியில் வாவ்ரின்கா

மார்ச் 17, 2017.
 Comments  
 


Stan Wawrinka
 

இந்தியன் வெல்ஸ்: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா முன்னேறினார். காலிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை வீழ்த்தினார்.

அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர். முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய வாவ்ரின்கா, இரண்டாவது செட்டை 4–6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட் ‘டை–பிரேக்கர்’ வரை சென்றது. இதில்எழுச்சி கண்ட வாவ்ரின்கா, 7–6 என வென்றார். முடிவில் வாவ்ரின்கா 6–4, 4–6, 7–6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் வாவ்ரின்கா, ஸ்பெயினின் பாப்லோ காரெனோ பஸ்டா மோதுகின்றனர்.

வீனஸ் தோல்வி:

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2–6, 6–4, 3–6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

மற்றொரு காலிறுதியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6–3, 6–7, 2–6 என பிரான்சின் கிறிஸ்டினாவிடம் தோல்வி அடைந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?