Advertisement


'இரட்டை' மகிழ்ச்சியில் ரொனால்டோ

மார்ச் 15, 2017.
 Comments  
 


Cristiano Ronaldo to be the dad of twins
 

லண்டன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ விரைவில் 'இரட்டை' குழந்தைகளுக்கு அப்பா ஆகப் போகிறார்.

கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 32. போர்ச்சுகல் அணியின் கேப்டன், ரியல் மாட்ரிட் கிளப் அணியில் விளையாடுகிறாா். இவரது தோழி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், 23.

எனினும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை 'மூடு மந்திரமாக' இருக்கும். ரொனால்டோவுக்கு வாடகைத் தாய் மூலம் ஏற்கனவே கிறிஸ்டியானோ ஜூனியர், 6, என்ற மகன் உள்ளான்.

தற்போது மீண்டும் அடையாளம் தெரியாத வாடகைத் தாய் மூலம், விரைவில் இரட்டை குழந்தைகளுக்கு அப்பா ஆக உள்ளார். இந்த பெண் அமெரிக்காவை சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

இதுகுறித்து இங்கிலாந்தில் வௌியாகும் 'தி சன்' என்ற பத்திரிகையில் செய்தி வௌியாகியுள்ளது. இதில்,' கிறிஸ்டியானோ ரொனால்டோ குடும்பத்துக்கு புதிய வரவு வரவுள்ளது. விரைவில் இவர், இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா ஆகப் போகிறார்,' என, தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?