Advertisement


வீழ்வது எழுவதற்கே!

மார்ச் 14, 2017.
 Comments  
 


india test team
 

சரிவிலிருந்து மிகச் சிறப்பான முறையில் மீண்டு வருவது தான் இந்திய அணியின் சிறப்பம்சம். இதற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் வெற்றி சிறந்த உதாரணம்.

 கடந்த 2014–15ல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி முதல் இரு டெஸ்டில் தோற்றது. பின் எழுச்சி பெற்று, அடுத்த இரு போட்டிகளை ‘டிரா’ செய்தது. அடுத்து 2015ல் நடந்த இலங்கை தொடரில் இந்த எழுச்சி இன்னும் வலிமையானது. முதல் டெஸ்டில் 176 ரன்களை துரத்திய இந்திய அணி 112 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. 

அக்னி பரீட்சை:

அப்போது தான் கேப்டனாக பொறுப்பேற்றிருந்த கோஹ்லிக்கு, இத்தோல்வி அக்னிப்ரீட்சை ஆனது.  சுதாரித்துக் கொண்டு,  வீறு நடை போடத்துவங்கினார். முன் எப்போதும் இல்லாத வகையில் முதன் முறையாக தொடர்ந்து 19 டெஸ்டில் தோல்வியடையாமல் வலம் வந்தது இந்திய அணி.

மீண்டும் தோல்வி:

தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் அதிர்ச்சி தரும் வகையில் புனே டெஸ்டில் இந்திய அணி வீழ்ந்தது. இந்த தோல்வி இந்திய வீரர்கள் ஒவ்வொருவரையும் பெரியளவில் காயப்படுத்தியது.  தோல்வியை பாடமாக எடுத்துக் கொண்டு, பெங்களூரு டெஸ்டில் தங்களது வாய்ப்புக்காக காத்திருந்தனர். 

பதிலடி எப்படி:

தங்கள் தரப்பு தாக்குதலை வலுவாக தொடுத்தனர். இரண்டாவது இன்னிங்சில் இந்த வாய்ப்பு வந்தது. இதை கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.  பின் எந்த ஒரு இடத்திலும் ஆஸ்திரேலிய அணி மீண்டு வராமல் பார்த்துக் கொண்டனர். கடைசியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1–1 என, சமன் செய்தது. 

இப்போட்டிக்கு முன் கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘முடிவு எப்படி இருந்தாலும் பெங்களூரு டெஸ்டில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். யாராவது மூன்று பேர் பொறுப்பெடுத்து செயல்பட்டால் வெற்றி வசப்படும்,’’என்றார்.

சொல்லி வைத்தது போல, இரண்டாவது டெஸ்டில் லோகேஷ் ராகுல், ஜடேஜா, புஜாரா, ரகானே, அஷ்வின் உள்ளிட்டோர் அசத்தினர்.  இந்திய அணியும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. இந்த வெற்றிப் பயணம் தொடரும் என நம்புவோம்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?