Advertisement


தடகளம்: லாராவுக்கு தங்கம்

மார்ச் 14, 2017.
 Comments  
 


laura muir
 

செர்பியாவின் பெல்கிரேட் நகரில் ஐரோப்பிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பெண்களுக்கான 3 ஆயிரம் மீ., ஓட்டத்தின் பைனலில்  பிரிட்டனின் லாரா மவுர் 8:35:67 நிமிடத்தில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலம் முறையே துருக்கியின் யாஸ்மின், பிரிட்டனின் எல்லிஸ் கைப்பற்றினர். 

கால்பந்து: பிரான்ஸ் சாம்பியன்

அமெரிக்காவில் பெண்களுக்கான ‘ஷி பிலீவ்ஸ்’ கால்பந்து சாம்பியன்ஷிப் நடந்தது. வாஷிங்டனில் நடந்த பைனலில் பிரான்ஸ், அமெரிக்க அணிகள் மோதின. இதில் பிரான்சின் எகுனியா (10வது நிமிடம்), கேம்லி (8,63) கோல் அடித்து அசத்தினர், பிரான்ஸ் அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது. 

கோல்ப்: டஸ்டின் அபாரம்

மெக்சிகோ நகரில் உலக கோல்ப் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் ஸ்பெயினின் ஜான் ரஹிம், இங்கிலாந்தின் ராஸ் பிஷர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நான்கு சுற்று முடிவில் அபாரமாக செயல்பட்ட அமெரிக்காவின் டஸ்டின் ஜான்சன் 270 புள்ளிகள் பெற்று முதலிடத்துடன் கோப்பை வென்றார். இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே பிரிட்டனின் டாமி பிளட்வுட், ராஸ் பிஷர் பிடித்தனர். 

டென்னிஸ்: மெல்சருக்கு கோப்பை 

போலந்தின் ரோகிளவ் நகரில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஆஸ்திரியாவின் ஜுர்ஜென் மெல்சர், போலந்தின் மிகலை எதிர் கொண்டார். இதில், மெல்சர் 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார். 

பாட்மின்டன்: ‘சூப்பர்’  சென் 

ஜெர்மனியில் உள்ள முல்ஹெய்ம் நகரில் ஜெர்மன் ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சீன தைபேயின் சோ டியன் சென், சக வீரரான டிசு வெய் வாங் மோதினர். முதல் செட்டை 21–16 என கைப்பற்றிய சென், அடுத்த செட்டையும் 21–14 என தன்வசப்படுத்தினார். முடிவில், சென் 21–16, 21–14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். 

பேஸ்பால்: இத்தாலி வெற்றி 

மெக்சிகோவின் ஜபோபன் நகரில் நடந்த உலக பேஸ்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இத்தாலி, மெக்சிகோ அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் சம பலத்தை வெளிப்படுத்தியதால், போட்டி விறுவிறுப்பாக இருந்தது. முடிவில் இத்தாலி அணி 10–9 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஸ்குவாஷ்: ஜான் கலக்கல்

செக் குடியரசு தலைநகர் பிராகுவில் சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவு பைனலில் செக் குடியரசின் ஜான் கோகல், சக வீரர் ஜாகப்பை  11–3, 14–12, 11–7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, கோப்பை கைப்பற்றினார். 

* பெண்கள் பிரிவில் செக்  குடியரசின் ஜுஜானா 11–8, 6–11, 11–8, 10–12, 11–9 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை அன்னா செர்மியை வீழ்த்தினார்.

கூடைப்பந்து: போர்ட்லேண்ட் அசத்தல்

அமெரிக்காவில் தேசிய கூடைப்பந்து (என்.பி.ஏ.,) சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் போர்ட்லேண்ட் டிரெய்ல் பிளாஸ்சர்ஸ் அணி, பிலடெல்பியா சிக்சர்ஸ் அணி.யை 114–108 என்ற கணக்கில் வென்றது. 

* மற்றொரு லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணி 122–110 என்ற கணக்கில் போனிக்ஸ் அணியை வீழ்த்தியது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?