Advertisement


பார்சிலோனா அணி தோல்வி * ‘லா லிகா’ கால்பந்தில் ஏமாற்றம்

மார்ச் 13, 2017.
 Comments  
 


Barcelona talisman in La Liga race with Real Madrid
 

லா கோருனா: டெபோர்டிவோ லா கோருனா அணிக்கு எதிரான ‘லா லிகா’ கால்பந்து லீக் போட்டியில் பார்சிலோனா அணி தோல்வி அடைந்தது.

ஸ்பெயினில், உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ‘லா லிகா’ கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன.

லா கோருனா நகரில் நடந்த லீக் போட்டியில் டெபோர்டிவோ லா கோருனா, பார்சிலோனா அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பார்சிலோனா சார்பில் லுாயிஸ் சாரஸ் (46வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். டெபோர்டிவோ அணிக்கு ஜோசெலு (40வது நிமிடம்), பெர்கன்டினோஸ் (74வது) தலா ஒரு கோல் அடித்தனர்.

மாட்ரிட் நகரில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், ரியல் பெடிஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த அணி சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (41வது நிமிடம்), செர்ஜியோ ரமோஸ் (81வது) தலா ஒரு கோல் அடித்தனர். ரியல் பெடிஸ் அணிக்கு சனாப்ரியா (24வது) ஆறுதல் தந்தார்.

இதுவரை விளையாடிய 26 லீக் போட்டியில் 19 வெற்றி, 2 தோல்வி, 5 ‘டிரா’ என 62 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் அணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அடுத்த இரண்டு இடங்களில் பார்சிலோனா (60 புள்ளி), செவில்லா (57) அணிகள் உள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?