Advertisement


பார்சிலோனா ‘திரில்’ வெற்றி :காலிறுதிக்குள் நுழைந்தது

மார்ச் 09, 2017.
 Comments  
 


neymar
 

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், கடைசி நேரத்தில் 3 கோல் அடித்து, ‘திரில்’ வெற்றி பெற்ற பார்சிலோனா அணி, காலிறுதிக்கு முன்னேறியது.

ஐரோப்பாவில் ‘கிளப்’ அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் ‘ரவுண்டு–16’ போட்டிகள் நடந்தன.

இதன் முதல் போட்டியில் பார்சிலோனா அணி, பாரிஸ் செயின்ட்–ஜெர்மன் அணியிடம் 0–4 என, தோற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் பெரியளவில் வென்றால் மட்டுமே, பார்சிலோனா அணி, காலிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில் இரு அணிகள் மீண்டும் மோதின.

பார்சிலோனா அணிக்கு சுவாரஸ் (3வது), மெஸ்சி (50வது) தலா 1 கோல் அடித்தனர். குர்ஜவா (பாரிஸ்) 40வது நிமிடம் ‘சேம் சைடு’ கோல் அடித்தார். போட்டி முடிய 2 நிமிடம் முன், கடைசி கட்டத்தில் பார்சிலோனா அணி 3–1 என, முன்னிலையில் இருந்தது.

இருப்பினும் இந்த வெற்றி காலிறுதிக்கு உதவாது என்பதால், கோல் எண்ணிக்கையை அதிகரிக்க போராடினர். போட்டி முடிய இரு நிமிடம் (88வது) இருக்கும் முன். நெய்மர் ஒரு கோல் அடித்தார்.

போட்டியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+1 வது) கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் நெய்மர், மற்றொரு கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டம் முடிவதற்கு சற்று முன் (90+5வது) நெய்மரிடம் இருந்து பந்தை பெற்ற செர்ஜி ராபர்ட்டோ, பந்தை கோல் வலைக்குள் தள்ள முயற்சித்தார்.

இது ‘கோல் போஸ்டில்’ பட்டு உள்ளே செல்ல, பார்சிலோனா அணி 6–1 என்ற கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ‘ரவுண்டு–16’ சுற்றின், இரு போட்டி முடிவில், 6–5 என, முன்னிலை பெற்ற பார்சிலோனா அணி, காலிறுதிக்கு முன்னேறியது.

 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?